புலமைப்பித்தன்

Engirunthu Paarthalum Song Lyrics

Movie: Varaprasadham (1976)
Music: R. Govarthanan
Lyricists: Pulamaipithan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும்

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான்

ஆண்: நீ படித்த சட்டம் என்றால் மாற்றி வைக்கலாம் அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார் மாற்றி வைப்பது நீ படித்த சட்டம் என்றால் மாற்றி வைக்கலாம் அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார் மாற்றி வைப்பது

ஆண்: ஊருக்கென்று தீர்ப்பெழுதி பார்த்தவனை இப்பொழுது தன்னுடைய தீர்ப்பெழுத ஆணையிட்டது விதி தத்துவத்தை என்னவென்று காட்டி விட்டது

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான்

ஆண்: பந்தல் ஒன்று பூங்கொடிக்கு போட்டு வைத்தது அந்த பந்தலிலே தீப்பிடித்தால் என்ன செய்வது

ஆண்: கண்கள் சிந்தும் நீரினிலே தீயணைத்து பார்த்தவரும் கற்பனையை ஏன் வளர்த்தாய் பேதை உள்ளமே ஒரு கை தடுத்து நிற்பதுண்டா கால வெள்ளமே

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான்

ஆண்: சொந்த பந்தம் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை அந்த சொந்த பந்தம் இல்லையென்றால் துன்பமுமில்லை

ஆண்: இன்பம் என்ற ஏடெடுத்து துன்பம் என்ற பாட்டெழுதி ஏக்கத்திலே நாள் முழுதும் பாடி நிற்கிறோம் ஒருநாள் தூக்கத்திலே கண்ணிரெண்டை மூடி வைக்கிறோம்

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான் எது வந்தாலும் வரட்டும் என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

ஆண்: எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்ன தீர்ப்பு வந்தாலும் வாழ்க்கை ஒன்றுதான்