Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

ஆண்: தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே தொடர பாதை இல்லையே கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே கிழக்கு மேற்கு இதிலே நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும்

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

ஆண்: சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே எங்கிட்டு போனது பொறப்பு வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது நெஞ்சிலே பொங்குது சிரிப்பு பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே