Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்
ஆண்: சபலங்கள் நூறு சரசங்கள் பாரு வா…என் ரதியே வா…

ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்…
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ம்ம்..ம்ம்..

ஆண்: எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு ஆனந்தம் ஒன்றே நினைவு..ஊ… தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது நேரங்கள் வீணாகுதே..ஏ..ஏ…
பெண்: பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா

ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்…
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ம்ம்..ஹா..

பெண்: கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும் இதற்காகத்தான் அல்லவா இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம் நீ சொல்ல நான் கேட்கிறேன்
ஆண்: நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா..ஆ…

ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ஹா..