இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கை வரலாறு 

Name AR Rahman
Born Name A. S. Dileep Kumar
Age 55 (January 6, 1967)
Occupation Record Producer, Film Composer, Singer, Songwriter
Parents Name R. K. Shekhar (Father)

Kareema Beegum (Mother)

Spouse Name Saira Banu
Children Khatija Rahman (Daughter)

Rahima Rahman (Daughter)

A. R. Ameen (Son)

ஏ ஆர் ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன.

music director ar rahman images

இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.

2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.

இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

Music Director AR Rahman Childhood Days in Tamil

ரகுமான் சனவரி 6, 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். தந்தை பெயர் R K சேகர், அம்மா பெயர் கஸ்தூரி. அக்கா பெயர் ஏ.ஆர்.ரெய்கானா. அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ்(நடிகர்). தங்கை பாத்திமா, இஷ்ரத் மற்றும் சகலை ரகுமான்(நடிகர்). இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர்.

Music Director AR Rahman Early Life in Tamil

சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார்.

11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

music director ar rahman images

Music Director AR Rahman Marriage Life in Tamil

AR ரகுமான் மார்ச் 12, 1995 ஆம் ஆண்டு மனைவி பெயர் ஷெரினா பானுவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Music Director AR Rahman Entry in Cini Field in Tamil

1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.

music director ar rahman images

முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.

ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.

2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.

music director ar rahman images

ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது.

இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.

music director ar rahman images

Music Director AR Rahman Film List in Tamil

ஆண்டு தமிழ்
1992 ரோஜா
1993 ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே
1993 புதிய முகம்
1993 திருடா திருடா
1993 உழவன்
1994 டூயட்
1994 காதலன்
1994 கருத்தம்மா
1994 மே மாதம்
1994 புதிய மன்னர்கள்
1994 வண்டிச்சோலை சின்னராசு
1994 பவித்ரா
1995 பம்பாய்
1995 இந்திரா
1995 முத்து
1995 ரங்கீலா
1996 இந்தியன்
1996 காதல் தேசம்
1996 லவ் பேர்ட்ஸ்
1996 மிஸ்டர் ரோமியோ
1997 இருவர்
1997 மின்சார கனவு
1997 ரட்சகன்
1998 ஜீன்ஸ்
1998 உயிரே
1999 முதல்வன்
1999 தாஜ் மஹால்
1999 சங்கமம்
1999 காதலர் தினம்
1999 ஜோடி
1999 தாளம்
1999 என் சுவாசக் காற்றே
1999 படையப்பா
2000 அலைபாயுதே
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 ரிதம்
2000 தெனாலி
2001 ஸ்டார்
2001 பார்த்தாலே பரவசம்
2001 அல்லி அர்ஜூனா
2002 கன்னத்தில் முத்தமிட்டால்
2002 பாபா
2002 காதல் வைரஸ்
2003 உதயா
2003 பரசுராம்
2003 பாய்ஸ்
2003 எனக்கு 20 உனக்கு 18
2003 கண்களால் கைது செய்
2004 ஆய்த எழுத்து
2004 நியூ
2004 தேசம்
2005 அ ஆ
2006 சில்லுனு ஒரு காதல்
2006 வரலாறு (காட்பாதர்)
2007 குரு
2007 சிவாஜி
2007 அழகிய தமிழ் மகன்
2008 சக்கரக்கட்டி
2010 விண்ணைத்தாண்டி வருவாயா
2010 எந்திரன்
2012 கடல்
2013 மரியான்
2013 அம்பிகாபதி
2014 கோச்சடையான் (திரைப்படம்)
2014 காவியத் தலைவன்
2014 லிங்கா
2015 ஐ (திரைப்படம்)
2016 24
2016 அச்சம் என்பது மடமையடா
2016 ஓ காதல் கண்மணி
2017 மெர்சல்
2018 செக்க சிவந்த வானம்
2018 சர்க்கார்
2018 எந்திரன் 2.0
2019 பிகில்
2021 நவரசா
2022 கோப்ரா
2022 பொன்னியின் செல்வன்
2022 வெந்து தணிந்தது காடு
2022 பாத்து தல

music director ar rahman images

Music Director AR Rahman Awards and Recognition

  • 2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
  • தேசிய விருதுகள் – 4 (ரோஜா, மின்சாரகனவு, லாகன், கன்னத்தில் முத்தமிட்டால்)
  • இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
  • பத்மஸ்ரீ விருது
  • லாரன்ஸ் ஆலிவர் விருது
  • தமிழக திரைப்பட விருது
  • மலேசிய விருது
  • ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
  • கோல்டன் குளோப் விருது
  • கிராமிய விருது

Actor AR Rahman Social Media Link

Reference: Wikipedia