Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Shoba Chandrasekar

Added Date: Feb 11, 2022

பெண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண்: கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

பெண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண்: ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ

பெண்: ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ

பெண்: ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்… ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்…

பெண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே