புலமைப்பித்தன்

Naan Aada Vandhean Song Lyrics

Movie: Varam (1989)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை

பெண்: மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை

பெண்: நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண்: அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு

பெண்: இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன் இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன்

பெண்: நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை

பெண்: நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன் நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்

பெண்: இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும் மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம் இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா

பெண்: நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை