புலமைப்பித்தன்

Pesakkoodathu Yaarum Song Lyrics

Movie: Varam (1989)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

பெண்: கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ். பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது

பெண்: நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்

பெண்: மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ..