புலமைப்பித்தன்

Enakku Nee Unakku Naan Song Lyrics

Movie: Vazhkkai Chakkaram (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான் தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான் தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா மீட்டும் வீணையே விரல் மீது கோபமா மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண்: நாளான பின் தெரியும் தெரியும் நான் யாரென புரியும் புரியும் நீர் மேகங்கள் விலகும் விலகும் நெடு வானமும் விளங்கும் விளங்கும்

ஆண்: சில நேரம் தென்றல் கூட புயல் போல தோன்றலாம் பாலும் கள்ளாகும் சிறு பூவும் முள்ளாகும் பிழை பார்த்திடும் பார்வையால்

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான் தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா மீட்டும் வீணையே விரல் மீது கோபமா மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண்: பகையாகுமா இமையும் விழியும் பிரிந்தோடுமா கரையும் நதியும் திசை மாறுமா நிழலும் உடலும் தனியாகுமா நினவும் மனமும்

ஆண்: உருவான கோபம் தாபம் விதி செய்த நாடகம் நீயும் இல்லாது இனி நானும் இங்கேது ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான் தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா மீட்டும் வீணையே விரல் மீது கோபமா மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா