புலமைப்பித்தன்

Puthu Rojavin Song Lyrics

Movie: Varaprasadham (1976)
Music: R. Govarthanan
Lyricists: Pulamaipithan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: புது ரோஜாவின் இதழ்களிலே ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள் தனிமையிலே எனை அழைத்தாள் தவியாய் தவித்திருந்தாள்

பெண்: இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்.

பெண்: வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு மாலை நேரம் பார்த்து வந்தது வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு மாலை நேரம் பார்த்து வந்தது மன்னன் நெஞ்சம் அதில் மங்கை நெஞ்சம் சேரும்போது வாடுகின்றது

ஆண்: விழி மோகம் மோகம் என்றது இடை போதும் போதும் என்றது விழி மோகம் மோகம் என்றது இடை போதும் போதும் என்றது அடி முதலாய் முடி வரையில் இதழால் அளந்திடலாம். அடி முதலாய் முடி வரையில் இதழால் அளந்திடலாம்.

பெண்: இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்.

ஆண்: கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம் காணும்போது போதை வந்தது கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம் காணும்போது போதை வந்தது மண்ணைப் பார்க்கும் பின் என்னைப் பார்க்கும் நாணம் வந்து நேரில் நின்றது

பெண்: தமிழ் பாடும் பெண்மையல்லவோ இது பாதை மாறும் உள்ளமோ தமிழ் பாடும் பெண்மையல்லவோ இது பாதை மாறும் உள்ளமோ மாலை தரும் காலம் வரும் எல்லாம் தொடர்ந்து வரும் மாலை தரும் காலம் வரும் எல்லாம் தொடர்ந்து வரும்