புலமைப்பித்தன்

Poonguyil Rendu Song Lyrics

Movie: Veetla Visheshanga (1994)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்.. ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்.. ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் அடடா காத்துல எங்கும் அதுதான் கேக்குது இன்னும் கண்ணே எந்தன் கண்ணே கேளு…

ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

ஆண்: ஆஹா..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..

ஆண்: மேகத்துக்கு நேர் வகிடு யார் எடுத்து சீவியது
பெண்: மேனி எங்கும் ஓவியங்கள் யார் இரவில் தீட்டியது
ஆண்: அழகுப் பெண்ணின் அங்கம் முழுதும் தங்கம் தங்கம் பாடடி கண்ணே பருவச் சந்தம்

பெண்: விழியோ கொஞ்சும் கொஞ்சும் மனமோ அஞ்சும் அஞ்சும் மன்னனின் நெஞ்சம் எனது சொந்தம்

ஆண்: வானம் எது பூமி எது இரவென்ன பகலென்ன தெரியவில்லே கண்ணே எந்தன் கண்ணே கேளு…

ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்

குழு: அஆஹா…ஆஅ…ஆஅ.. ஆஅ..ஆ..ஆஹா…ஆஹா ஆஅ..ஆ..ஆஹா…ஆஹா

ஆண்: நீ நடந்த கால் சுவடு மண்ணை விட்டுப் போகலையே தேவதை உன் பொன்னழகு கண்ணை விட்டுப் போகலையே மழலை கொஞ்சும் கிள்ளை மனதில் சின்னப் பிள்ளை தோள்களில் துள்ளும் பருவ முல்லை

ஆண்: மயக்கும் கண்கள் ரெண்டு மனதை அள்ளிக் கொண்டு ஓடுது என்னை திருடிக் கொண்டு

ஆண்: பார்க்கும் இடம் அத்தனையும் உனை அன்றி எனக்கிங்கு எதுவும் இல்லை கண்ணே எந்தன் கண்ணே கேளு.

ஆண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் அடடா காத்துல எங்கும் அதுதான் கேக்குது இன்னும் கண்ணே எந்தன் கண்ணே கேளு…

பெண்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்