Asai Anna Arumai Thambi cover

Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

ஆண்: மலை போல துன்பங்கள் வந்தாலுமே உன் மனமது தளர்ந்திடாதே வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள் வாட நீ பார்த்திடாதே… வாட நீ பார்த்திடாதே…

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா.

ஆண்: தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் சிறுவர்கள் கையேந்தியே திரிவதைப் பார்த்திடடா

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா. மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா.

ஆண்: விளையும் பயிர் செழித்திடவே வேலிக் கட்டிக் காத்திடவே களையை நீக்குவதைக் கடமையாக நீ கொள்ளடா உலகம் தழைத்திடவே உயர் நாடி இவர்களடா

ஆண்: வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா. மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா.