Asai Anna Arumai Thambi cover

Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: K. V. Mahadevan and K. Rani

Added Date: Feb 11, 2022

ஆண்: காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு

பெண்: மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாரு.. அந்த மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாரு..பாரு..பாரு..

இருவர்: காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு

ஆண்: ஆனா விலாசம் இல்லாத சனங்க அவஸ்தேப் படுகிறதைப் பாரு அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு.. அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு..

இருவர்: காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு

ஆண்: ஆணாப் பொறந்தும் கையாலாகாத பசங்க பெண்ணாகத் திரிகிறதப் பாரு
பெண்: கண்காணாத போது ஜோப்படி செய்யும் காவாலி போகிறதப் பாரு..

இருவர்: காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு

ஆண்: தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு

பெண்: தன் பாவந்தீர தன் பாவந்தீர தம்பிடியப் போடும் தர்மப் பிரபுவையும் பாரு…

ஆண்: மானாபிமானம் விட்டு பெரிய மனுஷங்கிட்ட வட்டமிடும் காக்காயப் பாரு வட்டமிடும் காக்காயப் பாரு

பெண்: வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு மைனர் வேஷம் போடுவதைப் பாரு மைனர் வேஷம் போடுவதைப் பாரு

ஆண்: நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண்: போதும் நாணமாய் வாழவழி பாரு..
ஆண்: நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண்: போதும் நாணமாய் வாழவழி பாரு..

இருவர்: காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு பாரு பாரு