Devi – 1968 Film cover

Movie: Devi – 1968 Film (1968)
Music: S. Dakshinamurthy
Lyricists: Palladam Manickam
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண்: சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண்: குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை வளர்ந்த மனிதன் ஆசைகளால் வாழும் வழிகளில் நேர்மையில்லை..

ஆண்: சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண்: கனியிதழ் சிரிப்பில் அழகாட கன்னப் பொய்கையில் தேனூற கனியிதழ் சிரிப்பில் அழகாட கன்னப் பொய்கையில் தேனூற கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு காலடி நிழலே சொர்க்கமம்மா

ஆண்: கண்ணில் ஆடும் இளம் குழந்தை கடவுள் எழுதிய மணிக் கவிதை கண்ணில் ஆடும் இளம் குழந்தை கடவுள் எழுதிய மணிக் கவிதை இன்னொரு பிறவி நானெடுத்தால் என்றும் குழந்தையாய் வாழ விடு இறைவா..என்றும் குழந்தையாய் வாழ விடு

ஆண்: சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா