Annaparavai cover

Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண்: காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: ஓ…ஓ..சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண்: ஆ…ஆ…காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
ஆண்: அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது
பெண்: மதி முகம் சிரிக்குது
ஆண்: மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே..

பெண்: சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது

பெண்: ஆளான காலத்தில் நாளாக நாளாக இனிக்கும் இளமை ராகங்களே
ஆண்: காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம் துடிக்கும் அழகின் ஜாடைகளே..
பெண்: எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான்
ஆண்: ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்…

பெண்: கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
ஆண்: அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது
பெண்: மதி முகம் சிரிக்குது
ஆண்: மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே..

பெண்: சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது

பெண்: தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு அணைத்த கரங்கள் ஆராதனை
ஆண்: பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம் மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன்

பெண்: உனக்கு நான் எனக்கு நீ தினம் தினம் திருவிழா
ஆண்: நினைத்ததே நடந்தது எனக்கு நீ கிடைத்தது..

பெண்: கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது
ஆண்: அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது
பெண்: மதி முகம் சிரிக்குது
ஆண்: மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே..

பெண்: சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண்: ஆ..ஆ..காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

பெண்: ஓ…ஓ… சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது..