Anney Anney cover

Movie: Anney Anney (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: மங்கையர் திலகமே மாதர்குல மாணிக்கமே மகா கவி பாரதியார் பாடி வைத்த புதுமை பெண்ணே…ஏ…

ஆண்: ஆமா…ஆமா.. பாட்டுல வெச்சாரு பாரதியாரு தமிழ் எட்டுல வெச்சாரு பாரதிதாசரு உங்கள நாட்டுல…நம்ம வீட்டுல வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கேட்டு நிக்கணும்

ஆண்: தும்ப விட்டு வால் புடிச்சா மாடுகூட நிக்காது பொம்பளைங்க அப்படிதான் போக விட்டா சிக்காது முட்டை இடும் பெட்டைகள அரட்டி உருட்டி மெரட்டி

பெண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண்: அக்கினி சுத்தி அம்மி மிதிப்பா அப்புறமா தான் நம்ம மிதிப்பா கண்ணகியப் போல் காட்சியளிப்பா கொண்டவனையே பெண்டு எடுப்பா தினம் ஊர் சுத்தி வருவா பொது சேவைகள் புரிவா அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் புருஷன விடுவா

ஆண்: சமைக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டா சம்சாரம் என்பதையே மறக்க வேண்டா ஹோட்டலையே வீடு என்று எண்ண வேண்டா ஹஸ்பெண்ட சஸ்பெண்டு பண்ண வேண்டா மீட்டிங்கு பார்டின்னு அலஞ்சாக்கா திரிஞ்சாக்கா புத்தி கெட்ட பத்தினிய அடக்கி ஒடுக்கி மடக்கி

ஆண்: வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண்: தும்ப விட்டு வால் புடிச்சா மாடு கூட நிக்காது பொம்பளைங்க அப்படித்தான் போக விட்டா சிக்காது முட்டை இடும் பெட்டைகள அரட்டி உருட்டி மெரட்டி

ஆண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் ஹான் ஹான்

ஆண்: சாட்டை எடுத்தா மாடு அடங்கும் கோலை எடுத்தா மந்தி அடங்கும் அங்குசத்திலே ஆன அடங்கும் என்ன பண்ணுனா பொண்ணு அடங்கும் அந்த பட்டினத்தாரும் சித்தர் பதினெட்டு பேரும் உங்க சாகசத்தையும் சரித்திரத்தையும் சொன்னதக் கேளு

ஆண்: மருதாணி மஞ்சளையே ஏச வேண்டா மேக்கப்பு பேன் கேக்கு பூச வேண்டா பண்பாட்ட குப்பையிலே வீச வேண்டா சோசலிசம் இதுவென்று பேச வேண்டா வருந்தாம திருந்தாம இனி மேலும் இருந்தாலே ரெண்டுங்கெட்டான் பொண்டுங்கள அறிஞ்சு தெரிஞ்சு புரிஞ்சு

ஆண்: வெக்கிற. எடத்துல. ஓங்கள வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண்: தும்ப விட்டு வால் புடிச்சா மாடு கூட நிக்காது பொம்பளைங்க அப்படித்தான் போக விட்டா சிக்காது முட்டை இடும் பெட்டைகள அரட்டி உருட்டி மெரட்டி

ஆண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் ஹான் ஹான் வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்