Annaparavai cover

Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: {கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க
ஆண்: ஓடிப் போனா
குழு: ஒளிஞ்சு நிப்பேன்
ஆண்: யார போல
குழு: இந்தப் பொண்ண போலே} (2)

ஆண்: அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட…

ஆண்: அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட…

ஆண்: கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க

ஆண்: சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா

ஆண்: புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன் சதுர வட்டையா

ஆண்: திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு கர்வம் இப்ப அடங்கி நிக்குது பருவ வயசு உருவம் புதுசு பாத்து பழக ஏங்குது மனசு…

ஆண்: கோபாலா
குழு: ஏன் சார்
ஆண்: எங்க போறே
குழு: சந்தைக்கு போறேன்
ஆண்: என்ன வாங்க
குழு: ஒரு முசலு வாங்க
ஆண்: ஓடிப் போனா
குழு: ஒளிஞ்சு நிப்பேன்
ஆண்: யார போல
குழு: இந்தப் பொண்ண போலே

ஆண்: சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா

ஆண்: ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா

ஆண்: பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன் பரிசு ஒன்னு பெற நெனச்சேன் பெடலை மிதிச்சு உடல வளைச்சு மனச ஒடிச்சி பறந்து போறியே…

ஆண்: கோபாலா
ஆண்: ஏன் சார்
ஆண்: எங்க போறே
ஆண்: வீட்டுக்கு போறேன்
ஆண்: வருவியா
ஆண்: வரமாட்டேன்
ஆண்: காத்திருப்பேன்
ஆண்: நின்னுகிட்டே இரு..