Puthukottai Bhuvaneswari Song Lyrics

Movie: Rajakali Amman (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Kalidasan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி

குழு: மேல் மலையெனும்.. அங்காள பரமேஸ்வரி

பெண்: உறையூரு வெட்க்காளி உஜ்சையனி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவற்கரை பத்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே…

குழு: எட்டுப்பட்டி ராஜகாளி.. அம்மா தாயே.

பெண்: நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே

குழு: மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே

பெண்: மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா முப்பாத்தம்மா பாளையத்தம்மா முண்டகக்கன்னி திரௌபதியே அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா

குழு: அர்த்தநாரி தாயே உன் அருள் காட்டம்மா

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.

பெண்: எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம். உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும் உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.

பெண்: திருக்கடவூரின் அபிராமி சிதம்பரத்தில் நீ சிவகாமி திருப்பத்தூரின் பூமாரி திருவேற்காட்டில் கருமாரி
குழு: தாயே

பெண்: மண்டைக்காட்டு பகவதியே மயிலாப்பூரின் கற்பகமே கொல்லூர் வாழும் மூகாம்பிகா தக்ஷினேஸ்வரம் பவதாரிணி

பெண்: ஜகதாம்பா வடிவாம்பா கனகாம்பா லலிதாம்பா வாலாம்பா ஞானாம்பா நாகாம்பா ஸ்வர்ணாம்பா சென்னியம்மா பொன்னியம்மா கங்கையம்மா செஞ்சியம்மா கோணியம்மா குலுங்கையம்மா கன்னியம்மா துளசியம்மா

பெண்: ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி. ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி. தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஓரு அன்னை நீயே.

குழு: லுலுலுலுலுலு…..

பெண்: நெல்லை நகர் காந்திமதி எல்லையம்மா இசக்கியம்மா மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
குழு: காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா.

பெண்: பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா. செல்லாயி சிலம்பாயி.கண்ணாத்தா சாரதாம்பா. பன்னாரி அம்மாவே.பால சௌந்தரி.

குழு: தேனாண்டாளே… எங்கள் குல தெய்வமே.

பெண்: துர்க்கையம்மா குமரியம்மா வேக்குளியம்மா கௌரியம்மா கோல விழியம்மா முத்தாளம்மா கஸ்தூரி வராஹியம்மா. நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா

குழு: பராசக்தி கொல்லிமலை பாவையம்மா.

பெண்: அபயாம்பிகை நீலாம்பிகை அலமேலம்மா வழிகோலம்மா. நாராயணி தாக்ஷாயினி. கன்னிகா பரமேஸ்வரி. கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா. என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பாரம்மா. அம்மா…அம்மா…அம்மா…ஆ.அம்மா.ஆ.ஆ…

குழு: ஊஊஊ..ஊஊஊ… ஊஊஊ…ஊஊஊ…