Mathalam Thattikadaa Song Lyrics

Movie: Thangarasu (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ஆளான பொண்டுகளே அலங்கார செண்டுகளே நம்மூரு வீரனுக்கு ஆலங்கா சுத்துங்கடி வாடாத மல்லியப்பூ வழியெல்லாம் தூவுங்கடி ஆலையம்மா குங்குமத்த அண்ணனுக்கு சூடுங்கடி மவராசன் புகழ் பாடி மனசார வாழ்த்துங்கடி.. லுலுலுலுலுலுலுலு……

ஆண்: மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா இனி நம்ம காலம் வாம்மா குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண்: நெஞ்சுக்கொரு நீதியுண்டு நேர்மைக்கொரு காலமுண்டு வஞ்சனைகள் ஜெயிச்சதாக வரலாறு எங்கே உண்டு அன்புக்கொரு ஜாதியில்ல அடிமைகள் யாருமில்ல அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் இனிமேல் இல்ல மயங்கி இருந்த மூள இப்ப தெளிஞ்ச வந்த வேள பொறுத்து இருந்த வீரம் அது பொங்கி எழும் நேரம்

ஆண்: ஹே மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா இனி நம்ம காலம் வாம்மா குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண்: ஏழைகள் நம்ம இனம் கோழைகள் இல்லையென்று ஏமாத்தும் மனிதர்களுக்கு சொல்வோம் வாங்கடா எல்லோரும் ஒண்ணு பட்டா இல்லாமை இல்லையடா நாமெல்லாம் ஒரு தாயின் பிள்ளைதானடா

ஆண்: அம்மா கொடுத்த உடம்பு இது அழுத்தமான இரும்பு யப்பா நீயும் திருந்து இல்ல வைப்பேன் தினமும் விருந்து எதிர்காலம் இனி ஏழைகள் பக்கமடா

ஆண்: மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா இனி நம்ம காலம் வாம்மா குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு ஒரு கும்மாளந்தான் போட்டு ஹே ஹேய்

பெண்
குழு: பொண்ணாக பொறந்தவள கண்ணா மதிக்கும் மனுஷன் இந்த மண்ணில் பொறந்த அழகன் ஆண்
குழு: அஞ்சாத சிங்கம் இவன் அன்புக்கொரு முயல்தான் ஒரு துன்பம் தந்தா புயல்தான்

பெண்
குழு: மங்காத தங்கம்தான் நம்மூரு சிங்கம்தான் ஆண்
குழு: எல்லோருக்கும் நல்லவன் வில்லாதி வில்லவன் பெண்
குழு: ஏழை மீது பாசம் உள்ளவன்

ஆண்: ஊர் வாழ சேவை செஞ்சா நூறாண்டு வாழ்ந்திடலாம் நான் போகும் பாதையிது நல்லா கேட்டுக்க ஆறோடு ஓடி வரும் நீர் போலே வாழ்ந்திடனும் ஆணவத்த இனியாச்சும் நீயும் மாத்திக்க

ஆண்: தெற்கே அடிச்ச காத்து அது திரும்பி போச்சு நேத்து தத்தி நடக்கும் வாத்து உன் தளுக்கு மினுக்க மாத்து இனிமேலும் இங்கு வேணாம்டி உன் கூத்து

ஆண்: மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா இனி நம்ம காலம் வாம்மா ஹை குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு ஒரு கும்மாளந்தான் போட்டு

ஆண்: நெஞ்சுக்கொரு நீதியுண்டு நேர்மைக்கொரு காலமுண்டு வஞ்சனைகள் ஜெயிச்சதாக வரலாறு எங்கே உண்டு அன்புக்கொரு ஜாதியில்ல அடிமைகள் யாருமில்ல அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் இனிமேல் இல்ல

ஆண்: மயங்கி இருந்த மூள இப்ப தெளிஞ்ச வந்த வேள பொறுத்து இருந்த வீரம் அது பொங்கி எழும் நேரம்

ஆண்: மத்தளம் தட்டிக்கடா மன்னார்குடி மாமா இனி நம்ம காலம் வாம்மா குத்துடா குத்திக்கடா டப்பாங்குத்து பாட்டு ஒரு கும்மாளந்தான் போட்டு