Oodha Oodha Song Lyrics in Tamil

Lyricist Vaali

ஊதா ஊதா பாடல் வரிகள்

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ
நீ பார்த்தால் ஊதா பூவே நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஆஆஆஆ ஆஆஆஆ 
ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே
ஆஆஆஆ ஆஆஆஆ 

ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா

ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஓதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ நாநாநா…

உன் மழை கூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ.
ஊதா ஊதா ஊதா.ம்ம். ஊதா…

Movie: Minsara Kanna
Lyrics: Vaali
Music: Deva

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.