Aanazhagan cover

Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி நில்லாமலே…நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் வாசலில் சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்..

ஆண்: மான் துள்ளும் மலையாளத்தின் எழில் சித்திரமே சித்திரமே வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே நன்னிலமே

பெண்: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ…தித்தித்ததோ… ஆவணி திருவோணத்தில் உன்னை சந்தித்ததோ..சந்தித்ததோ…

ஆண்: பொன்னல்லோ சிறு பூவல்லோ மெல்ல தொடவோ என்னைத் தரவோ

பெண்: தேனல்லோ பசும்பாலல்லோ பக்கம் வரவோ நான் தரவோ

ஆண்: செம்மீன்கள் துள்ளுதே இங்கும் அங்கும் கண் ஓடையில்

பெண்: சந்தோஷம் பொங்குதே முன்னும் பின்னும் உன் கூடலில் நான்..சொல்லவோ… சின்ன பூவல்லவோ

ஆண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி

பெண்: நில்லாமலே…நீ போவதேன் சொல்லாமலே…நான் நோவதேன் ஏன்

ஆண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி

பெண்: நீ வர எதிர்ப்பார்த்தது இந்த நந்தவனம் நந்தவனம் நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம் செங்கமலம்

ஆண்: காமனின் கலைக் காண்பது இந்த அந்தப்புரம் அந்தப்புரம் பூமரக் குயில் கூவுது இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்

பெண்: மஞ்சமே இந்த நெஞ்சமே சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ

ஆண்: உள்ளமே இன்ப வெள்ளமே உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ

பெண்: அன்றாடம் சேர்வது மன்னா மன்னா உன் பொன்மடி

ஆண்: எந்நாளும் இன்பமே நீயே நீயே என் பைங்கிளி பூ..மங்கையே..பொங்கிடும் கங்கையே..

பெண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்

ஆண்: நில்லாமலே…நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் வாசலில் சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்..