Aanazhagan cover

Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ

பெண்: எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட கண் இரண்டும் இமைகள் மூடுமா நள்ளிரவில் எனது நூலாடையில் பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா

ஆண்: ராதைப் பெண்ணே காதல் மன்னன் போதைக்கேற்ற மாயக் கண்ணன் ஜாலம் காட்டுவான்
பெண்: ஹஹஹாஹ்
ஆண்: ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும் ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம் கோலம் தீட்டுவான்

பெண்: பறிக்கச் சொல்லுது இந்த பவள மல்லிகை வா வா அதிகாலையும் மாலையும் வீசும் இதன் ஆனந்த வாசம்

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண்: பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே அத்தி மரக் கனியும் நீ தான் என கொத்தித் தின்ன இளமை தூண்டுதே

பெண்: ஆடை சுற்றும் கோயில் தெப்பம் கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும் காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா

ஆண்: கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே நாளும் இள மாலையில் வாலிபம் ஓதும் இந்த மன்மத வேதமே

பெண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண்: கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ

பெண்: மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும் ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா நெஞ்சில் கோலம் போட்டதோ

பெண்: கண்ணில் உலா வரும் காதல் கனா உந்தன் கானம் கேட்டதோ