Auto Raja cover

Movie: Auto Raja (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்

ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…மலரே நலமா…

ஆண்: வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கு பூவேது காயேது

ஆண்: நினைத்தால் எட்டாத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே…நான் எங்கே… திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே…நான் எங்கே… நீ எங்கே…நான் எங்கே…

ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…மலரே நலமா…

ஆண்: நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம் என்னோடு நான் கண்டேன்

ஆண்: இருக்கும் வர்க்கங்கள் இரண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது…. சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது….வழி ஏது முடியாது….

ஆண்: மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…மலரே நலமா…