Auto Raja cover

Movie: Auto Raja (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்

ஆண்: நம் வறுமை துயரை துடைக்கும்

ஆண்: ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…

ஆண்: முப்பது ஆண்டு சுதந்திர நாடு எப்படி வந்தது வறுமைக் கோடு

ஆண்: ஏழைகள் வேர்வை எங்கே போச்சு இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு

ஆண்: அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா

ஆண்: வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே..

ஆண்: வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே..

ஆண்: ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…

குழு: ……….

ஆண்: உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை

ஆண்: மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே

ஆண்: கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை

ஆண்: கூப்பிடு பாரதியை இனி ஒரு விடி செய்வோம் அதை எந்த நாளும் கேப்போம் தனி ஒருவனுக்கில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்

ஆண்: கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்….

ஆண்: செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்….

குழு: ………