Bhagyalakshmi cover

Movie: Bhagyalakshmi (1961)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: { மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி } (2)

பெண்: மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ

பெண்: மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பெண்: இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி

பெண்: இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ

பெண்: மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பெண்: மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி

பெண்: வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி

பெண்: அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ

பெண்: மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பெண்: கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி

பெண்: கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி

பெண்: இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்

பெண்: தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ

பெண்: மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பெண்: மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ

பெண்: மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி