Bhagyalakshmi cover

Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண்: காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண்: தூது சொல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய்

பெண்: வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது

ஆண்: ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹா.

பெண்: ஓஹொஹோஹோ ஓஹோஹோ ஓ ஓ ஓ..

இருவர்: ஆ…ஆ…ஆ…

பெண்: காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண்: ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும் பாடுகிறேன் பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்

பெண்: காதல் பைத்தியம் பொல்லாது கையும் காலும் நில்லாது வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா.

இருவர்: ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆ..ஆ…ஆ..ஆஅ..

ஆண்: காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

பெண்: அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

ஆண்: கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவர்: கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆ..ஆ…ஆ..ஆஅ..

ஆண்: காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ…அஹஹ ஆ. ஆ. ஆ..

இருவர்: காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ