Bhagyalakshmi cover

Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்…ம்ம்..ம்ம்.ஹ்ம்ம்.ம்ம்.ம்ம். ம்ம்.ம்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு

பெண்: காரில் ஏறி நாமும் அவரும் கற்பனை உலகம் செல்வோம் காசும் பணமும் தேவை இல்லை கருணை அங்கே செல்வம்

பெண்: கண்ணே ராஜா…கண்ணே ராஜா.

பெண்: தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம் வருவார் பாடல் பாடி சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம் தருவார் உன்னைத் தேடி

பெண்: கண்ணே ராஜா…ஆஅ..ஆஅ… கண்ணே ராஜா.

பெண்: ஒரு நாள் நாமும் பெருமைகளோடு ஒன்றாய் உலகினில் வாழ்வோம் ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும் உண்மை இன்பம் காண்போம்

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு ம்ம்…ம்ம்.ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்… ம்ம்…ம்ம்.ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்…