Bhagyalakshmi cover

Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

பெண்: ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

பெண்: நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ.ஆ…ஆ.

பெண்: நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

பெண்: காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ.ஆ…ஆ.

பெண்: காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே