Bharathiyar

காக்கை சிறகினிலே பாடல் வரிகள்

காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா
நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா…

Movie: Thulladha Manamum Thullum
Lyrics: Bharathiyar
Music: S. A. Rajkumar