Chinnachiru Kiliye Song Lyrics

Movie: Neethikku Thandanai (1987)
Music: M. S. Viswanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: K. J. Yesudas and Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..

ஆண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

இருவர்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ..ஏ… செல்வக் களஞ்சியமே…

பெண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…ஏ…
ஆண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…ஏ…

பெண்: அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே…
ஆண்: தேனே..ஆடி வரும் தேனே

இருவர்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ..ஏ… செல்வக் களஞ்சியமே…

ஆண்: உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி…ஈ… மேனி.. சிலிர்க்குதடி.

இருவர்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ..ஏ… செல்வக் களஞ்சியமே…

ஆண்: கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்… கள்வெறி கொள்ளுதடி.ஈ…
பெண்: கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்… கள்வெறி கொள்ளுதடி..ஈ.

ஆண்: உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி…ஈ… உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி…ஈ…

ஆண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…ஏ..
பெண்: என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..

இருவர்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ..ஏ… செல்வக் களஞ்சியமே…