Lyricist Kabilan

சென்னை பட்டணம் பாடல் வரிகள்

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கைய நீட்டினா… காசு மழை கொட்டணும்
சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கைய நீட்டினா… காசு மழை கொட்டணும்

குடிக்கிற தண்ணீர் காசு கொசுவைவிரட்ட காசு
அர்ச்சனை சீட்டும் காசு தேர்தல் சீட்டும் காசு

ஆட்டோ மீட்டர் காசு திருட்டு வீடியோ காசு
போலி சாமியார் காசு பொணத்தில் நெத்தியிலும் காசு
காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா வித்தா காசு

தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசு
காசு அயாயோ அயாயோ காசு காசு காசு

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கைய நீட்டினா… காசு மழை கொட்டணும்

பூமி வட்டமா காசு வட்டமா நாடே சுத்துதே நாகரீகம் கத்துதே
கடற்கரை காதல் காசு கவர்மெண்ட் மாப்பிளே காசு
நீலப்படமும் காசு சிவப்பு விளக்கும் காசு
எல்கேஜி-யும் காசு எம்.பி.பி.எஸ். காசு

இட்லிய வித்தாலும் காசு உன் கிட்னிய வித்தாலும் காசு
வயசு பொண்ணு வயசானலே மரங்கள் கிடைக்க காசு

கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசு
காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கைய நீட்டினா… காசு மழை கொட்டணும்

தநாக்கு தீன் தீம்தநாக்குதீன்…
கட்சி நூறுடா கொள்கை இல்லடா
கரன்சியை நீட்டுடா கைமேல போட்டுடா

ஊர்வலம் போனா காசு வன்முறை செஞ்சா காசு
சாதி சங்கம் காசு சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்த காசு தீக்குளிக்கவும் காசு

பொறம்போக்கு நிலமும் காசு அட இலவசம் கூட காசு
கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க யூதாஸ் வாங்குன காசு

காசின் மதிப்பை அறியா மனிதன் உலகில் செல்லா காசு
காசு அயாயோ அயாயோ காசு காசு காசு காசு காசு காசு…

Movie: Alli Thandha Vaanam
Lyrics: Kabilan
Music: Vidyasagar