Lyricist Yugabharathi

எத்தனை எத்தனை நீண்ட இரவுகள் பாடல் வரிகள்

எத்தனை எத்தனை நீண்ட இரவுகள் என்றைக்காவது விடியாதா
எத்தனை எத்தனை கோடி கவலைகள் என்றைக்காவது முடியாதா

அழுது அழுது தூர்ந்த விழியில் எப்படி
எப்படி கனவு வரும் பொழுது முழுதும் தீர்ந்த பிறகு
எப்படி எப்படி நிலை உயரும் இணையும்
கைகள் வெளுக்கும் போது இரவில் கூட விடியல் வரும்

அச்சம் தவிர பழகு பழகு துச்சம் துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று லட்சியம் அடைய பழகு பழகு பழகு

அணுவை உடைக்க பழகு பழகு புதுமை படைக்க பழகு பழகு
வித்தை பழகும் பொழுது விழு புண்ணும் பழகு பழகு பழகு

இறுகி இறுகி போன இரவை
இன்னும் பொறுத்தல் முறை இல்லை
இறுதி வரையில் வாழ்வை நொந்து இறந்து போவதில் பலன் இல்லை
உறுதியோடு நாளும் உழைத்தால் உலகம் நமக்கு பெரிதில்லை

இன்னொரு இன்னொரு தூய விடுதலை
அன்னை பூமியை தழுவாதா
தன்னலம் அற்றவர் தோன்றும்
அரசியல் மண்ணில் பூவென மலராதா

செயலை முதலில் நீ தொடங்கு
இமயம் உனக்கு கீழ் இருக்கும் புயலை மனதில் நீ எழுப்பு
புதிய திசைகள் தாள் திறக்கும்
உலகம் உனது பேரை சொல்ல வெற்றி சங்கு இசை அமைக்கும்

அச்சம் தவிர பழகு பழகு துச்சம் துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று லட்சியம் அடைய பழகு பழகு பழகு

நமது நமது நாளை நமதே என்னும் பொய்கள் விலகிவிடும்
எமது எமது யாவும் எமதே என்னும் உண்மை அருகில் வரும்
இனிது இனிது வாழ்வும் இனிதே இங்கே இன்றே தெரியவரும்…

Movie: Ji
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar