Lyricist Yugabharathi

கோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச

பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச

சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல

அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே

என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல வெக்கம் வருதே

ராசாவே உன்னால ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே பொய்யில்ல

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…

Movie: Mehandi Circus
Lyrics: Yugabharathi
Music: Sean Roldan