Asai Magan cover

Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: வினையாலே..ஏ..ஏ..ஏ…வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: அழுவதாலே ஆவதென்ன..ஆ..ஆ..ஆ… அழுவதாலே ஆவதென்ன அன்று செய்த வினையாலே

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: அளவு மீறிய அன்பு செய்தனை அமுதமே விஷம் ஆகி விட்டது அதனை நீயும் அறிகிலாயோ..

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: களிப்புடனே தாலாட்டியே கருணையோடு பாலூட்டியே கண்ணின் மணி போலே இரவு பகல் காத்து வந்த மகனிவனோ

ஆண்: நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே

ஆண்: தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே நீ செய்ததால் வந்த வினையே…