Lyricist Vairamuthu

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே பாடல் வரிகள்

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே

நான் உன்னை மறந்த செய்தி மறந்து விட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன்

கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்

நீ என்னை கேட்ட போது காதல் இல்லை
நான் காதலுற்ற போது நீயும் இல்லை

ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா

ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை

காட்சி யாவும் புதைந்து போனது என் நெஞ்சம்
உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்

ஓஹோ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே

என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj