Lyricist Vairamuthu

காதல் மழையே பாடல் வரிகள்

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ

அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா

அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா…
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ…
விழுந்தாயோ…..ஓ ஹோ

கண்ணில் ஒரு துளிநீர் மெல்லக் கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்

உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறைசெய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்

வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான்

தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே

வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய் உயிரே வாராய்
என் உயிரே வாராய்

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் மழையே
காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் மழையே
காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ

அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா

அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய் வாராய் வாராய்…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj