Bhagavathipuram Railway Gate cover

Movie: Bhagavathipuram Railway Gate (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Uma Ramanan and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தானானேனே..தனானா..தானானானா….

பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல

பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு… தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண்: கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே….ஏ..

பெண்: வெக்கமது உங்களுக்கில்ல… வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே

ஆண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு….

ஆண்: ஐலேசா..ஐலேசா..
குழு: ஹோயய்யா ஹோயய்யா
ஆண்: ஐலேசா..ஐலேசா..
குழு: ஹோயய்யா ஹோயய்யா

ஆண்: ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா.

பெண்: ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…ஆ…

ஆண்: என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே….

பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண்: ஹான்
பெண்: தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…

ஆண்: அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல

ஆண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு… தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு