Baba cover

Movie: Baba (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: ராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன் நாளை எங்கிவன் மன்னனா இல்லை மௌல்வியா யாரிவன் நாளை யாரிவன்

ஆண்: ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்

ஆண்: கேள்வியாய் வாழ்கிறான் மௌனத்தை ஆள்கிறான்

ஆண்: ராஜ்யமா இல்லை இமயமா ராஜ்யமா இல்லை இமயமா

ஆண்: மகனில்லை மகனில்லை என்னும் நாளில் மடியில் வந்த ராஜாவை தமிழர்கள் மனையெங்கும் மனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை

ஆண்: முதுகினில் புகழினை தூக்காமல் மூட்டை தூக்க பார்த்தாலே விதியிது விதியிது என எண்ணி மூச்சு வாங்கி வேர்த்தாலே

ஆண்: தொழில் என்ன செய்தாலும் இழிவில்லை என்பானே உழைக்காமல் உண்டால் தான் பிழை என்று சொல்வானே

ஆண்: ஏற்றமோ இறக்கமோ எதையுமே ஏற்பவன்

ஆண்: ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்

ஆண்: கடவுளை மறுத்து இவன் நாள் தோறும் கூறினானே நாத்தீகம் பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்த தென்ன ஆதிக்கம்

ஆண்: திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி

ஆண்: அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி

ஆண்: தனது அன்பு தாயை கை தொழும் பாபா தான் சிந்தையில் எந்நாளும் சின்னஞ்சிறு பாபா தான்

ஆண்: ஏழைகள் பார்வையில் முழு மனிதனாய் தெரிகிறான்

ஆண்: ராஜ்யமா இல்லை இமயமா ராஜ்யமா இல்லை இமயமா