Lyricist Na. Muthukumar

பூப்பறிக்க நீயும் பாடல் வரிகள்

பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி தந்தானே தந்தானே

பொட்டு வைக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
கண்ணடி கைகள் நீட்டுமடி தந்தானே தந்தானே

கோயிலுக்கு நீயும் போகாதே கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி பாக்குமடி
காட்டுக்குள்ள நீயும் போகாதே கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஓஹோ ஹோ

பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ஹோ

சூறாவளி போல போகிற இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா
சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா ஹோ

ஹேய் க க க ரி க ரி ச ச ச நீ நீ ச க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ

ஹொய்யாரா ஹொய்யா ஹொய்யாரா ஹொய்யா
ஹொய்யாரா ஹொய்யா ஹொய்யாரா ஹொய்யா
ஹொய்யாரா ஹொய்யா

ம்ம்ம் ஆத்துக்குள்ள நீ குளிச்சா அங்க உள்ள மீனு
எல்லாம் மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி

ஆட்டுக்குட்டி கூட இப்ப தாடி ஒன்னு வச்சிக்கிட்டு
ஒரு தலைக் காதலுடன் திரியுதடி

குச்சுப்புடி கதகளியெல்லாம் உன்
நடையிலே புதுப் புது பாடம் படிக்குமே

ரங்கோலி கோலம் எதுக்கடி கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே

நாடு விட்டு நாடு வரும் வேடந்தாங்கல்வெள்ளைப் புறா
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ

கால் முளச்ச சூரியனா தூள் கெளப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ

வட்டமிடும் பட்டாம்பூச்சியே உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு

திட்டம் இல்ல திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு…

Movie: Unakkum Enakkum
Lyrics: Na. Muthukumar
Music: Devi Sri Prasad