Lyricist Kabilan

பட்டாம்பூச்சி பாடல் வரிகள்

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

யானை தந்தத்தின் சிலை நீயே தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே என்னைக்கட்டி இழுக்காதே

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

எதைத்தருவது நான் என்று எதைப்பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல இதயம் குதித்தோட

தலை அசைக்குது உன் கண்கள் தவி தவிக்குது
என் நெஞ்சம் ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்
பூ முகம் உன் பூ முகம் அது முடியாத முதல் பாகம்

பெண் கவிதை இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண் இமையால் என்னை காதல் திறப்பாயோ

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
ஹோய் ஹோய் காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க தொலை தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே

உனது அருகினில் நான் இருக்க உயிர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க புதிதாய் பிறந்தேனே

மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே

வெண்ணிலவோ நெடுந்தூரம் பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

யானை தந்தத்தின் சிலை நீயே தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே என்னைக்கட்டி இழுக்காதே…

Movie: Kaavalan
Lyrics: Kabilan
Music: Vidyasagar