Lyricist Yugabharathi

சட சட பாடல் வரிகள்

சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலேன கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா

சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொட்டுதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே

சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே
மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்
உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே

சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா…

Movie: Kaavalan
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar