Lyricist Kalaikumar

ஒரு பௌர்ணமி நிலவு பாடல் வரிகள்

ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு சாலைகள் போட

இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி
நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி

ஹோ ஓஓ மலரே அழகே துள்ளி வரும் தென்றல்
காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்
சேற்று விடு ஆசை கூட்டில் புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே

ஓ ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு சாலைகள் போட

சொல்லாத காதல் சொல்ல வந்த போது
சொல்லெல்லாம் காணாமல் ஏன் போகுதோ

யார் நெஞ்சிலே தான் காதல் என்பதில்லை
ஆனால் என்ன எல்லாமே பூ பூக்குதோ

கார்காலம் தான் காதல் அது வந்தால் இன்பம் செய்யும்
போர் காலம் தான் காதல் அது வந்தால் இம்சை செய்யும்

அலை வந்து ஏதோ தான் சொல்கிறது
கரை அதை கேட்காமல் செல்கிறது

ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு சாலைகள் போட
ஓஓ ஓஓ ஓஓ

ஆகாய மேகம் உன் மீது போகும்
போகும் போது லேசாக தேன் தூவுமே

நான் தேடும் மேகம் என்னை வந்து சேர்ந்தால்
தெய்வம் வந்து என் வாழ்வை தாலாட்டுமே

பெண் பூவே உன் வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்றே மாறும்
என் ஆசை கை சேர்ந்தால் உன் வார்த்தை உண்மையாகும்

உனக்கென்ன நீ இங்கே வைர விழா
என்னைகாண வானம் தான் அருகினிலா

ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு சாலைகள் போட

இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி
நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி
ஹோ ஓஓ மழையே அழகே

துள்ளி வரும் தென்றல் காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன் சேற்று விடு ஆசை கூட்டில்
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே
ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ…

Movie: Raja
Lyrics: Kalaikumar
Music: S. A. Rajkumar