Lyricist Kalaikumar

அழகான கொலைகாரி பாடல் வரிகள்

அழகான கொலைகாரி கொலைகாரி
சுகமான சதிகாரி சதிகாரி
உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே

அசைந்தாடும் சிலையா நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை நீ அள்ளி சென்றாயே

ஒரு நொடியில் உன்னாலே எரிமலையில் வெந்தேனே
மறு நொடியில் தன்னாலே பனி துளியில் நின்றேனே

அழகான கொலைகாரி கொலைகாரி
சுகமான சதிகாரி சதிகாரி
உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே

என்னை நானும் தேடி தேடி காணாமல் போனேன்
உன்னை காணும் நேரம் எல்லாம் நான் என்னை கண்டேன்

இமை ரெண்டும் கண்ணை குத்தும் விந்தைகள் பார்த்தேன்
மழை தூறல் தீயாய் தீண்டும் மாயங்கள் கண்டேன்

பூவின் மீது இடியை போலே நெஞ்சில்
உந்தன் எண்ணம் மோத நூறாய் சுக்கு நூறாய்
நானே ஆகி போனேன்

இரவுகளில் ஏதேதோ கலவரத்தில் வேர்த்தேனோ
இருதயத்தில் பூ பூக்கும் அதிசயத்தை பார்த்தேனோ

அழகான கொலைகாரி சுகமான சதிகாரி
உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மலர் ஒன்று மனதை கிள்ள நான் வாடி நின்றேன்
மயில் தோகை புயலை வீச நான் ஆடி போனேன்

ஆஹா கடிகார முள்ளாய் உன்னை நான் சுற்றி வந்தேன்
கணம் நேரம் மரணம் ஒன்றை கண் பார்க்க கண்டேன்

ஏக்கம் தந்து தூக்கம் தின்றாய் தாகம் தந்து தள்ளி நின்றாய்
தேளாய் கொட்டும் தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்

தனிமையிலே நான் நின்று கதறும் படி செய்தாயே
கனவுகளில் நீ வந்து கன்னி வெடி வைத்தாயே

அழகான கொலைகாரி கொலைகாரி சுகமான சதிகாரி சதிகாரி
உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே

அசைந்தாடும் சிலையா நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை நீ அள்ளி சென்றாயே

ஒரு நொடியில் உன்னாலே எரிமலையில்
வெந்தேனே மறு நொடியில் தன்னாலே பனி துளியில் நின்றேனே…

Movie: Ninaithathu Yaaro
Lyrics: Kalai Kumar
Music: X. Paulraj