Aaradhanai cover

Movie: Aaradhanai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் பசி தூண்டும் அமுதம் தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்…

ஆண்: ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்

பெண்: ஹா..ஆஅ..ஹா..ஆ..

ஆண்: திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய் வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய் சாம்பல் ருசிக்க தனியாவாய்
பெண்: ஆஅ…
ஆண்: காயை புசிக்கும் கனியாவாய்
பெண்: ஆஆ…

ஆண்: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும் பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்

ஆண்: மின்னலிலே
பெண்: லா லலலா..
ஆண்: ஒரு கயிறு எடு
பெண்: லா லலலா..

ஆண்: மேகங்களால் ஒரு தூளி இடு கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்

பெண்: லால்லா லால்லா லா லல லால்லால் லால்லல லா லல லால்லால் லால்லல லா…

பெண்: ……….

ஆண்: முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்.. மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்.. முடியை பார்த்தால் முழு வெள்ளை
பெண்: ஆஆஅ…
ஆண்: மடியில் தவழும் மகன் பிள்ளை
பெண்: ஆஆ…

ஆண்: நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பெண்: ஹாஹஹா
ஆண்: பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச பாய் அதனில்
பெண்: லா லலலா
ஆண்: நீ சாய்ந்திருக்க
பெண்: லா லலலா
ஆண்: பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க.. இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

ஆண்: குங்கும செங்கமலம்
பெண்: ஆஅ…
ஆண்: இள மங்கையின் தங்க முகம்
பெண்: ஆஅ…
ஆண்: பசி தூண்டும் அமுதம்
பெண்: ஆஅ…
ஆண்: தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்

ஆண்: ஒரு குங்கும செங்கமலம்
பெண்: ஆஅ…
ஆண்: இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்..
பெண்: லாலாலாலா..