Chinna Jameen cover

Movie: Chinna Jameen (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: டுர்ர்ர்ர்ர்….டுர்ர்…டுர்ர்ர்ர்……..

பெண்: ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கித்தரேன் ராசையா காதுல ஒன்னு மூக்குல ஒன்னு மாட்டையா அதை அப்படிக் கொஞ்சம் இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண்: சந்தனப் பட்டு மேலாக்கு வாங்கித்தரேன் ராசையா பொம்பள போல போத்திக்க நீயும் ஆசையா ஒரு பூவையும் வச்சு பொட்டையும் வச்சு பேசையா

பெண்: பொழுதானா அடுப்பூதும் பொட்டப் புள்ள நீதான் இனி மேலே இது போல உனக்கு ஒன்னும் தேவை இல்ல

பெண்: ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கித்தரேன் ராசையா காதுல ஒன்னு மூக்குல ஒன்னு மாட்டையா அதை அப்படிக் கொஞ்சம் இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண்: பொறந்த இடம் பெரிய இடம் மறந்துட்டியே பொழுதன்னைக்கும் குழந்தையப் போல் இருந்துட்டியே

பெண்: தைரியமா எதிர்த்து நிக்க தெரிஞ்சுக்கையா தலைமுறையின் பெருமைகள புரிஞ்சுக்கையா

குழு: அக்காதான் பக்காவா சொன்னாங்க கேளையா மக்காக நிக்காதே நீ வீரனைப் போல் சூரனைப் போல் மாறிடணும் வேங்கையப் போல் நீ எழுந்து சீறிடணும்

ஆண்: வந்தவள் எல்லாம் அக்காவா போட்டது எல்லாம் சொக்காவா போடா போ நான்தான் இவ சொன்னா கேக்கணுமா

பெண்: ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கித்தரேன் ராசையா காதுல ஒன்னு மூக்குல ஒன்னு மாட்டையா அதை அப்படிக் கொஞ்சம் இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண்: பொழுதானா அடுப்பூதும் பொட்டப் புள்ள நீதான் இனி மேலே இது போல உனக்கு ஒன்னும் தேவை இல்ல

பெண்: ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கித்தரேன் ராசையா காதுல ஒன்னு மூக்குல ஒன்னு மாட்டையா அதை அப்படிக் கொஞ்சம் இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

பெண்: ஒரு கிளியோ உன்ன நெனச்சு உருகுதையா மனசுலதான் உன்ன வரைஞ்சு மருகுதையா

பெண்: தளதளன்னு வளந்துருக்கு தெரியலையா தவிக்கிறதும் துடிக்கிறதும் புரியலையா

குழு: அண்ணாச்சி அக்காவ கண்ணாலம் கட்டிக்கோ கண் வெச்சா உன் மேலதான் நாயனத்த நாங்கள் எல்லாம் ஊதுகிறோம் அய்யரப் போல் மந்திரத்த ஓதுகிறோம்

ஆண்: ஒத்தையில் நிப்பேன் எந்நாளும் வேண்டியதில்லே கண்ணாலம் பேசாதே இங்கே உங்க அக்கா சங்கதிய

பெண்: ஒன்னப்பு தட்டு புல்லாக்கு வாங்கித்தரேன் ராசையா காதுல ஒன்னு மூக்குல ஒன்னு மாட்டையா அதை அப்படிக் கொஞ்சம் இப்படிக் கொஞ்சம் ஆட்டையா

ஆண்: பொழுதானா அடுப்பூதும் பொட்டப் புள்ள நீதான் அடி ஆத்தி என்ன மாத்தி வச்சவங்க யாரும் இல்ல