Chinna Kannamma cover

Movie: Chinna Kannamma (1993)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Minmini and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே

பெண்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே

பெண்: கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ…ஓ… அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…ஓ.. விளையாடும் மானோ அலையோடும் மீனோ மடி மீதில் வந்தே சேராதோ ஓ..

பெண்கள்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ…ஓ…

பெண்: கண் வண்ணமே கண்டால் அது பௌர்ணமியாய் காணும் கை வண்ணமே கண்டால் அது தாமரையாய் தோணும்

பெண்: பொன் இதழ் தந்தது பூ இதழோ புன்னகை சிந்திய மாந்தளிரோ உன் குரல் தந்தது வேங்குழலா உன் மனம் வானத்து கார்முகிலா

பெண்: அரும்புத் தோட்டம் போலே அழகான வீச்சில் குறும்புக் கேள்வி கேட்கும் கரும்பு போல பேச்சில் கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ.

பெண்கள்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ…ஓ… அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…ஓ..