Movie: Chinna Jameen (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano
Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே ஹே மானம் உள்ள மனுஷங்க இருக்கும் மண்ணிலே சில ஈனப்பட்ட ஜென்மங்களும் இருக்குதன்னன் இப்போ அத என்னான்னு கேக்கலாமா அவக யாருயின்னு பாக்கலாமா..ஹா..
ஆண்: அடி எத்தனை எத்தனை வெங்கல பித்தள வந்தாலும் இதுக்கு மவுசு எந்நாளும் இருக்கு இதுதான் முப்பாட்டன் சரக்கு
ஆண்: இது மண்ணுல பண்ணது மின்னுது மின்னுது பொன்னான பானை இதுக்கு முன்னால தானே எதுவும் நிக்காது மானே
ஆண்: {இதில் சமைச்சு வெக்கிற கறியும் கொழம்பும் ஜோரா இருக்குமே அடடா ஊரே மணக்குமே சுவைச்சா தேனா இனிக்குமே} (2)
ஆண் மற்றும்
குழு: அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா
ஆண்: எவரும் எடுக்கும் படி இருக்கும் எங்க பானை வெல எதுத்த கடையிலதான் இருப்பதெல்லாம் யானை வெல
ஆண்: சைசுல தாங்க அது கொஞ்சம் பெருசு சரக்குன்னு பார்த்தா இது ரொம்ப புதுசு
ஆண்: அதுகிட்ட லேசா இருக்குது சொகுசு அத நம்பிப் போனா கலங்கிடும் மனசு
ஆண்: உனக்கும் நல்லது எனக்கும் நல்லது ஒதுங்கி வந்து விடு உன்ன கணக்கு பண்ணிடும் கவுக்க எண்ணிடும் வேணா விட்டுப்புடு அவ அக்கா சங்கதி அம்மா சங்கதி எல்லாம் அப்படித்தான்
ஆண் மற்றும்
குழு: அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா
ஆண்: அடி எத்தனை எததனை வெங்கலம் பித்தள வந்தாலும் இதுக்கு மவுசு எந்நாளும் இருக்கு இதுதான் முப்பாட்டன் சரக்கு
ஆண்: இதில் சமைச்சு வெக்கிற கறியும் கொழம்பும் ஜோரா இருக்குமே அடடா ஊரே மணக்குமே சுவைச்சா தேனா இனிக்குமே
ஆண் மற்றும்
குழு: அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா
ஆண்: சோளக் கொல்லையிலே சொருகி வைக்கும் பானையடி ஆள கெறங்க வைக்கும் சரக்கு காய்ச்சும் பானையடி
ஆண்: கொளத்துல நீர எடுக்குற பானை ஒலையில சோற வடிக்கிற பானை பழம் புளி வாங்கி அடக்குற பானை பால் தயிர் ஊத்தி கடையிற பானை
ஆண்: பானை வாங்கிடும் வேளை வந்திடும் மால போட்டிடத்தான் நல்ல அரசன் போல் ஒரு புருஷன் வந்தொரு தாலி கட்டிடுவான் தை மாசம் வந்ததும் பொங்கல் பொங்கிட பானை வெச்சிருக்கேன்