Bhama Rukmani cover

Movie: Bhama Rukmani (1980)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ………..

பெண்: ………

ஆண்: நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள்
பெண்: நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்…

ஆண்: நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள்
பெண்: நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்…

ஆண்: உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன்

பெண்: கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன் கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன்

ஆண்: உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல உண்மையில் உன்னாலே
பெண்: கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல உன் புகழ் சொன்னாலே..

ஆண்: நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள்
பெண்: நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்…

ஆண்: இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம் நீராட துடிக்கும் நிலை காண்பாய்

பெண்: கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில் நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்

ஆண்: அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி சங்கமம் ஆகட்டுமே

பெண்: அவசரம் என்ன அறுவடை காலம் வருவதை அறியாயோ…

ஆண்: நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள்
பெண்: நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்…