Bhama Rukmani cover

Movie: Bhama Rukmani (1980)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா

ஆண்: கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண்: ஊரிலுள்ள ஆம்பளை செய்வதைத்தானே உணர்ச்சியின் வேகத்தில் நானிங்கும் செய்தேன்

ஆண்: காதலிச்ச பெண்ணை நான் கைவிடலாமா கை விட்ட பாவத்தை நான் செய்யலாமா

ஆண்: குறையில்லா மனிதனே உலகிலே இல்லையே வீட்டுக்குள்ளே கூப்பிட்டு நீ என்னை மன்னித்து சேர்த்துக் கொள்ள கேட்டுக்கிறேன் கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா.. கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா..

ஆண்: பிள்ளைப் போல என்னை நீ வளர்ப்பதாய் சொல்லி பாடிய பாட்டையும் ஏன் மறந்தாய் பாமா பாய் விரிச்ச ராத்திரி நடந்ததி கொஞ்சம் எண்ணியே பார்க்கையில் ஏங்குது நெஞ்சம்

ஆண்: கணவனை தொழுவதாய் சொன்னவள் நீயடி கைப்பிடிச்ச காலத்தில் சொன்ன வார்த்தைகள் காத்துலதான் போய் விட்டதே…

ஆண்: கதவ தெறடி ருக்கு என் காலு வலிச்சு கெடக்கு

ஆண்: கதவ தெறடி ருக்கு என் காலு வலிச்சு கெடக்கு பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண்: அத்த பெத்த பூ மயில் எனக்கென ஏங்கி தவிப்பதாய் துடிப்பதாய் தாயும் வந்து சொன்னாள்

ஆண்: தாயின் உள்ளம் குளிர்ந்திட அவளுக்கு நானே தாலியை கட்டினேன் வேறென்ன செய்தேன்

ஆண்: தவறு தான் இருப்பினும் தயவு நீ புரியனும் போனதெல்லாம் போகட்டும் ஆனதெல்லாம் ஆகட்டும் கோபத்தையும் நீ மாத்தணும்

ஆண்: ஆயர்பாடி கண்ணனின் கதையினை போலே அடியவன் வாழ்க்கையும் ஆகிப் போச்சு பெண்ணே

ஆண்: இங்கும் அங்கும் ஒதப்படும் பந்து போல் என்னை இருவரும் செய்கையில் எங்கு நான் போவேன் இரண்டு நாள் பட்டினி இரக்கம் நீ காட்டடி கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் சொன்னத செய்கிறேன் உள்ள வர நீ சொல்லடி

ஆண்: கதவ தெறடி ருக்கு என் காலு வலிச்சு கெடக்கு பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண்: கதவ தெறடி ருக்கு என் காலு வலிச்சு கெடக்கு என் காலு வலிச்சு கெடக்கு என் காலு வலிச்சு கெடக்கு