Bhama Rukmani cover

Movie: Bhama Rukmani (1980)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹ்ம்ம்

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும். மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும். மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே நல்ல தாயாய் நானாக ஒரு சேயாய் நீயாக தினம் சொல்வேன் தாலாட்டு அது பிள்ளை விளையாட்டு….

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: தெய்வமே நீயென தினமும் தொழுவேனே சேவகி நானென கடமை புரிவேனே ஒரு துன்பம் வந்தாலே அதை தீர்க்கும் மருந்தாவேன் உன் வாழ்க்கை பூங்காவில் இளந்தென்றல் காற்றாவேன்….

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹான் மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்

பெண்: ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை அந்தி மாலை வந்தாலே நான் காமன் கணையாவேன் உன் கைகள் தொடும்போது நான் காதல் கனியாவேன்…

பெண்: கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்.ஹாஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்