Movie: Needhikku Thalaivanangu (1976)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப் பிள்ளையென வாழ்பவன்டா பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப் பிள்ளையென வாழ்பவன்டா அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா…

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண்: ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து

ஆண்: ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து காலம் நெருங்குது கதை முடிய இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய

ஆண்: ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண்: ஏ பைத்தியம்… என் கிட்ட விளையாடுற வேலை வச்சுக்காதே நான் நெருப்பு ஜாக்கிரதை (வசனம்)

ஆண்: நான் நெருப்புல நடப்பவன்டா ஆனா நீதிக்கு பயந்தவன்டா

ஆண்: நான் நெருப்புல நடப்பவன்டா ஆனா நீதிக்கு பயந்தவன்டா தருமத்தை அழிக்க வந்தா என்னைத் தந்தேனும் காப்பவன்டா உயிரைத் தந்தேனும் காப்பவன்டா

ஆண்: நான் யாருன்னு இப்போது தெரியாது அதை நானாகச் சொன்னாலும் புரியாது

ஆண்: நான் யாருன்னு இப்போது தெரியாது அதை நானாகச் சொன்னாலும் புரியாது ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது… ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது…

ஆண்: நான் நெருப்புல நடப்பவன்டா ஆனா நீதிக்கு பயந்தவன்டா தருமத்தை அழிக்க வந்தா என்னைத் தந்தேனும் காப்பவன்டா உயிரைத் தந்தேனும் காப்பவன்டா

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண்: ஜெய் ஆஞ்சநேயா ஏ பைத்தியம் என்னை நீ கீழே தள்ளிட்டே நான் ஆண்டவானுடைய கோயிலையே பாதுக்காக்க பொறந்தவன்.. புடி சாபம் (வசனம்)

ஆண்: கோவில் காக்க வந்தவனே பாவி என்று மாறிவிட்டா சாமி எங்கு குடியிருக்கும் செங்கோல் பிடிக்கும் ஒருவன் கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால் நீதியெங்கு குடியிருக்கும்

ஆண்: நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு

ஆண்: நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன்

ஆண்: ஹேய்.. ரொம்ப நேரமா உன்ன நான் பார்க்கிறேன் சதுர் வாங்கி சதுர் வாங்கி நீ என்ன அடிக்கிற

ஆண்: அதுக்கு கிக்கின்னு சிரிப்பு தேவை இப நான் பக்தன் என்னையும் தொடுறான் உங்களையும் தொடுறான் நம்மள எல்லாம் இவன் தொடலாமா இவன் என்ன க்ஜாதி என்ன குளம் என்ன கோத்திரம்

ஆண்: பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ளநரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ

ஆண்: இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன்